search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க பாஜக காரணமா? -அமித் ஷா மறுப்பு
    X

    சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க பாஜக காரணமா? -அமித் ஷா மறுப்பு

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக இருப்பதாக வெளியான குற்றச்சாட்டை அமித் ஷா மறுத்துள்ளார். #AmitShah #ChandrababuNaidu #GodavariProtest
    ஐதராபாத்:

    மகாராஷ்டிரா-ஆந்திரா இடையே கோதாவரி நதிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. 2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கோதாவரியில் நான்டெட் மாவட்டம் பாப்லி என்ற இடத்தில் புதிதாக அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு செயல்படுத்தியது.

    இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய சந்திரபாபு நாயுடு மற்றும் எம்எல்ஏக்கள், மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழைய முயன்றபோது மகாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கும் மகாராஷ்டிர கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக பின்னணியில் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த குற்றச்சாட்டை பாஜக தலைவர் அமித் ஷா மறுத்துள்ளார்.



    இதுபற்றி ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அமித் ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததன் பின்னணியில் பாஜக இல்லை என்றும், தேர்தல் நேரங்களில் மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது என்றும் அமித் ஷா கூறினார். #AmitShah #ChandrababuNaidu #GodavariProtest
    Next Story
    ×