என் மலர்

  செய்திகள்

  மனைவியை கொலை செய்து, 10 மணி நேரம் பிணத்தின் அருகிலேயே இருந்த கணவரும், மகனும்
  X

  மனைவியை கொலை செய்து, 10 மணி நேரம் பிணத்தின் அருகிலேயே இருந்த கணவரும், மகனும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, 10 மணி நேரத்துக்கும் மேலாக அருகிலேயே அமர்ந்திருந்த கணவரும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். #Bengaluru
  பெங்களூரு:

  கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் ஹிரென் குமார் என்பவரும், அவரது 15 வயது மகனும் போர்வையால் சுற்றப்பட்ட ஒன்றை காருக்கு எடுத்துச் செல்வதை கண்ட குடியிருப்பின் பாதுகாவலர், அவர்களை தடுத்தி நிறுத்தி விசாரித்துள்ளார். இருவரும் தெளிவாக விடையளிக்காததாலும், அந்த போர்வையில் இரத்தக்கறை இருப்பதையும் கண்ட பாதுகாவலர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

  இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த போர்வையால் சுற்றப்பட்டிருந்த பெண்ணின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஹிரென் குமாரையும், மகனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், தனது மனைவி ப்ரீத்திக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், அதனால் அடிக்கடி அவர் தன்னை கொடூரமாக தாக்கி வந்ததாகவும் கூறியுள்ளார்.

  ப்ரீத்தியின் மனநிலையை கருத்தில்கொண்டு பொறுமையுடன் இருந்ததாகவும், ஆனால் இன்று பொறுமையை இழந்ததால் கத்தியை எடுத்து கழுத்தை அறுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் மதியம் 1 மணியளவில் நடந்துள்ளது. அதன் பிறகு தனது மனைவியின் பிணத்தின் அருகில் அமர்ந்த ஹிரென் குமாரை மாலை 4 மணியளவில் அவரது மகன் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  இதன்பிறகு வேறுவழியின்றி, இரவு வரை இருவரும் காத்திருந்து, உடலை கண்காணாத இடத்தில் போட்டுவிட திட்டமிட்டதாக போலீசாரிடம் ஹிரென் குமார் தெரிவித்துள்ளார். இதற்காக, சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக இறந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மனைவியின் உடலின் அருகிலேயே ஹிரென் குமார் அமர்ந்திருந்தது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  #Bengaluru
  Next Story
  ×