என் மலர்

  செய்திகள்

  ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி லக்னோவில் இருந்து அயோத்திக்கு பேரணி- பிரவீன் தொகாடியா அறிவிப்பு
  X

  ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி லக்னோவில் இருந்து அயோத்திக்கு பேரணி- பிரவீன் தொகாடியா அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி லக்னோவில் இருந்து அயோத்திக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி பேரணி நடத்தப்போவதாக பிரவீன் தொகாடியா அறிவித்துள்ளார். #PravinTogadia
  பைசாபாத்:

  அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவரான பிரவீன் தொகாடியா  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில், பைசாபாத் மற்றும் அயோத்திக்கு இன்று சென்ற பிரவீன் தொகாடியா, ராமர் கோவில் இயக்கத்திற்கு தொடர்புடைய தலைவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர், பேரணி நடத்தும் தேதியை அறிவித்தார்.

  இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில், வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த உள்ளேன். ராம ஜென்ம பூமிக்காக இந்துக்கள் செய்த தியாகத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த பேரணி நடத்தப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள்’ என்றார்.

  ராமர் கோவில் விஷயத்தில் மோடி இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. #PravinTogadia
  Next Story
  ×