என் மலர்

    செய்திகள்

    சுதந்திர தின விழாவில் தாக்குதல் நடத்த சதி? - லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி டெல்லியில் கைது
    X

    சுதந்திர தின விழாவில் தாக்குதல் நடத்த சதி? - லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி டெல்லியில் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுதந்திர தின விழாவை பயங்கரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், டெல்லியில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். #Delhi #IndependenceDay #MilitantArrest
    புதுடெல்லி:

    இந்தியாவின் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், எல்லை பாதுகாப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக செயல்படுமாறும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஹபிபுர் ரஹ்மான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய புலனாய்வு அமைச்சகம் தெரிவித்துள்ள இந்த தகவலில், ஒடிசாவில் வசித்து வரும் ஹபிபுர் ரஹ்மான், ஷேக் அப்துல் நயீம் என்பவருடன் இணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தீட்டி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் ஷேக் அப்துல் நயீம் என்ற பயங்கரவாதி 2 முறை தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு தப்பிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Delhi #IndependenceDay #MilitantArrest
    Next Story
    ×