search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தவர் மோடி - சிவசேனா குற்றச்சாட்டு
    X

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தவர் மோடி - சிவசேனா குற்றச்சாட்டு

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி பேசினார். #Mumbai #Sivasena #UddhavThackery #PMModi
    மும்பை:

    மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசில் சிவசேனா கூட்டணி வகித்தாலும், பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் என குற்றம் சாட்டி பேசினார்.

    மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் சிவசேனா கட்சியின் 52-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

    கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது, பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களை ஆட்சியில் அமரவைத்து ஏமாற்றம் அடைந்து விட்டனர்.

    இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் பங்களாவிற்கு அருகில் மர்மமான முறையில் பறக்கும் தட்டு ஒன்றை கண்டதாக சில நிருபர்கள் செய்தி வெளியிட்டனர். அனேகமாக பிரதமர் மோடி தற்போது வேற்று கிரகங்களுக்கு தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்து பாஜக வெளியேறி உள்ளது. அந்த ஆட்சி பயனற்றது என கண்டறிய பா.ஜனதாவுக்கு 3 ஆண்டுகளும், 600 ராணுவ வீரர்களின் உயிரும் தேவைப்பட்டதா?

    பயங்கரவாதத்துக்கு மதத்துடன் சம்பந்தம் இல்லை என்றால், ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் நீங்கள் ஏன் போர் நிறுத்தம் அறிவித்தீர்கள்? விநாயகர் சதுர்த்தி அல்லது தசரா விழாக்களின் போது, பாகிஸ்தான் இதேபோன்ற கொள்கையை பின்பற்றுகிறதா? என குற்றம் சாட்டி பேசினார். #Mumbai #Sivasena #UddhavThackery #PMModi
    Next Story
    ×