என் மலர்
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து சென்ற ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். #JammuKashmir #Firng
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாண்டிபோரா மாவட்டத்தில் ராணுவ வாகனத்தில் வீரர்கள் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தகவலறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பாதுகாப்பை பலப்படுத்தினர்.
அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. #JammuKashmir #Firng
Next Story