search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரபல பாடகி லதா மங்கேஷ்கரை நாளை சந்திக்கிறார் அமித்ஷா - பாஜவுக்கு ஆதரவு கோருகிறார்
    X

    பிரபல பாடகி லதா மங்கேஷ்கரை நாளை சந்திக்கிறார் அமித்ஷா - பாஜவுக்கு ஆதரவு கோருகிறார்

    பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கோரும் தனது பயணத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, நாளை பாடகி லதா மங்கேஷ்கர், நடிகை மாதுரி தீக்‌ஷித், தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகியோரை சந்திக்க உள்ளார். #AmitShah
    மும்பை:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை அக்கட்சி அறிமுகம் செய்தது. 

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 1 லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மட்டும் 50 பேரை தனியாக சந்தித்து பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி அவர்களின் ஆதரவை கோர உள்ளார்.

    அதனடிப்படையில், பதஞ்சலி நிறுவனதின் தலைவரும் யோகா துறையில் சிறப்பாக செயல்பட்டு வருபவருமான யோகா குரு பாபா ராம்தேவை அமித்ஷா நேற்று புதுடெல்லியில் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கி கூறி அவரின் ஆதரவையும் அமித்ஷா கோரியுள்ளார்.

    இந்நிலையில், நாளை மும்பை வர உள்ள அமித்ஷா, பாடகி லதா மங்கேஷ்கர், நடிகை மாதுரி தீக்‌ஷித், தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகியோரை சந்தித்து ஆதரவு கோர உள்ளார். 

    முன்னாள் ராணுவ தளபதிகளான தல்பீர் சிங் சுஹாக் மற்றும் சுபாஷ் காஷ்யாப், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் ஆகியோரை அமித்ஷா ஏற்கெனவே சந்தித்து அவர்களின் ஆதரவை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×