search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொகுசு விடுதியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு
    X

    சொகுசு விடுதியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு

    பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #KarnatakaCMRace #Congress #Parameshwara
    பெங்களூர்:

    கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    இதற்கிடையே, மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். இன்று எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

    கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சொகுசு விடுதியில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள பரமேஸ்வரா, கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஒருவேளை காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமையும் பட்சத்தில், பரமேஸ்வராவிற்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #KarnatakaCMRace #Congress #Parameshwara
    Next Story
    ×