search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் சீரழிந்து கிடக்கு - எடப்பாடி முன் சாமியாடியவரால் பரபரப்பு
    X

    தமிழகம் சீரழிந்து கிடக்கு - எடப்பாடி முன் சாமியாடியவரால் பரபரப்பு

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்ற தமிழக முதலமைச்சர் முன் சாமியாடிய நபர், தமிழகம் சீரழிந்துவிட்டதாக குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருப்பதி:

    திருப்பதியில் நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வராக சாமி கோவிலில் தரிசனம் செய்த பின்னர் ஹயக்ரீவர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றார்.

    அப்போது கோவிலில் உள்ள அர்ச்சகர் போன்று இருந்த ஒருவர் திடீரென சாமியாடினார். அவர் எடப்பாடியை என்ன வந்து பார்த்துட்டு போகச்சொல்லு. தமிழ்நாடு சீரழிந்து போய்ட்டு. வரச் சொல்லுடா முதல்ல என்று பலத்த சத்தத்துடன் சாமியாடினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே முதல்வரின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.



    இதில் அவர், ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த ஸ்ரீராமலு என்று தெரியவந்தது. அவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். அவரை எச்சரித்து விடுவித்தனர்.

    நான் இந்த மலையில் இருக்க பகவான் எனக்கு அருள்பாலித்துள்ளார். 1 வாரமாக இங்கு தங்கி உள்ளேன்.

    எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது. அனைத்தும் முடங்கி கிடக்கிறது. இதனால் பெருமாள் எனது ரூபத்தில் வந்து அவரை சந்திக்க வேண்டும் என்றார். அதனால் தான் அவரை சந்திக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவர் என்னை சந்திக்காமல் அலட்சியப்படுத்தி சென்றுவிட்டார் என்றார்.

    Next Story
    ×