search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் பயணத்தின்போது பயணிகள் இறந்தால் இழப்பீடு வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு
    X

    ரெயில் பயணத்தின்போது பயணிகள் இறந்தால் இழப்பீடு வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு

    ரெயில் பயணத்தின் போதோ, இறங்கும்போதோ பயணிகள் இறந்தால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரெயில்களில் பயணத்தின் போது இறக்கும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஆர்.எப்.நாரிமன் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ரெயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பல்வேறு மாநில ஐகோர்ட்டுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது பற்றியும் விசாரித்தனர்.

    1984-ம் ஆண்டு ரெயில்வே சட்டம் 124ஏ பிரிவின்படி ரெயில் முன் பாய்ந்து உயிர் இழந்தாலோ அல்லது தற்கொலை முயற்சியில் காயம் அடைந்தாலோ இழப்பீடு வழங்குவது கிடையாது. ஆனால் சில ஐகோர்ட்டுகள் இதற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டன.

    இந்த முரண்பாடுகள் பற்றி சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. 124-வது பிரிவின் படியும், 124-ஏ பிரிவின் படியும் உயிரிழக்கும் ரெயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது ரெயில்வேயின் கடமையாகும்.



    எனவே ரெயில் பயணத்தின்போதோ அல்லது ரெயிலில் இருந்து இறங்கும் போதோ தவறி விழுந்து இறந்தாலோ, காயம் அடைந்தாலோ இழப்பீடு வழங்குவது ரெயில்வேயின் கடமை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    தற்போது ரெயில்வே சார்பில் இழப்பீடு தொகையாக ஆண்டுதோறும் ரூ.350 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இழப்பீடு கேட்டு 38,000 மனுக்கள் நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    Next Story
    ×