என் மலர்

  செய்திகள்

  கர்நாடகாவில் இன்று மோடி மீண்டும் பிரசாரம்
  X

  கர்நாடகாவில் இன்று மோடி மீண்டும் பிரசாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகாவில் இன்று 4 பொதுக் கூட்டங்களில் மோடி உரையாற்றுகிறார். தும்கூர், கடாக், சிமோகா, மங்களூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். #karnatakaassemblyelections #Modi #BJP
  பெங்களூர்:

  பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் பலமுறை தேர்தல் பிரசாரம் செய்தார். கடந்த 2 மற்றும் 3-ந்தேதிகளில் அவர் தனது பிரசாரத்தின் போது காங்கிரசை கடுமையாக விமர்சித்தார்.

  இந்த நிலையில் மோடி அடுத்த கட்டமாக கர்நாடகா மாநிலத்தில் இன்று பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

  இன்று 4 பொதுக் கூட்டங்களில் மோடி உரையாற்றுகிறார். தும்கூர், கடாக், சிமோகா, மங்களூர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அவர் இன்று இரவு மங்களூரில் தங்குகிறார்.

  இதேபோல மோடி நாளையும் கர்நாடகாவில் பிரசாரம் செய்கிறார். சித்ரதுர்கா, ராய்ச்சூர், ஜம்காண்டி, ஹூப்ளி ஆகிய 4 இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் அவர் பேசுகிறார்.

  முன்னதாக மோடி நாளையும், 9-ந்தேதியும்தான் கர்நாடகாவில் பிரசாரம் செய்ய இருந்தார். இந்த பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு அவர் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார்.

  கர்நாடகாவில் மோடி முதலில் 15 இடங்களில் தான் பேச திட்டமிட்டு இருந்தார். காங்கிரசின் எழுச்சியை முழுமையாக கட்டுப்படுத்த அவரது பிரசார பொதுக் கூட்டம் 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்-மந்திரி வேட்பாளராக எடியூரப்பா, மோடி பங்கேற்கும் சில கூட்டங்களில் ஒன்றாக கலந்து கொள்கிறார்.

  பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மங்களூரில் இன்று வீதி வீ தியாக பிரசாரம் செய்கிறார்.

  இதேபோல மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று கல்பூர்சி மாவட்டத்தில் 4 பொதுக் கூட்டங்களில் பேசுகிறார். #karnatakaassemblyelections #Modi #BJP

  Next Story
  ×