என் மலர்

  செய்திகள்

  எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - பெண் படுகாயம்
  X

  எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - பெண் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் கர்னாஹ் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

  இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீரின் கர்னாஹ் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து தானியங்கி ஆயுதங்களுடன் கூடிய துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் நூர் ஜகான் என்ற பெண்ணின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக டாங்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றார்.

  தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும், எனினும் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Next Story
  ×