என் மலர்

    செய்திகள்

    கேரளாவை உலுக்கிய வெளிநாட்டு சுற்றுலா பெண் கொடூர கொலையில் 2 பேர் கைது
    X

    கேரளாவை உலுக்கிய வெளிநாட்டு சுற்றுலா பெண் கொடூர கொலையில் 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரளாவிற்கு வந்திருந்த லிதுயானியா நாட்டு சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவனந்தபுரம்:

    ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக லிதுயானியா நாட்டிலிருந்து கேரளாவிற்கு 2 சகோதரிகள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் மார்ச் 14-ஆம் தேதி காணாமல் போனதால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 21-ஆம் தேதி மாங்குரூவ் வனப்பகுதியில் அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

    கொல்லப்பட்ட பெண் கஞ்சா அளிக்கப்பட்டு, வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இவர் தற்கொலை செய்து கொண்டது போன்று சித்தரிப்பதற்காக, அவரை மரத்தின் கிளைகளில் தூக்கிட்டுள்ளனர்.

    தற்போது இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #kerala
    Next Story
    ×