என் மலர்
செய்திகள்

பிரிட்டன் செல்லும் டெல்லி மாணவிக்கு விசா வழங்க நடவடிக்கை - சுஷ்மா உறுதி
பிரிட்டனில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் பங்கேற்க செல்லும் டெல்லி மாணவிக்கு விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரிட்டனில் நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள டெல்லி சங்கம் விஹார் பகுதியில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த இஷா (14) என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இதையடுத்து, மே 3-ம் தேதி மாணவி பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்வதற்கு வேண்டிய டிக்கெட்கள் எடுக்கப்பட்டன. பிரிட்டன் செல்ல தேவையான விசாவுக்கு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, மாணவியின் சார்பில் அர்பிதா திவாரி என்பவர் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு டுவிட்டரில் தகவல் கொடுத்தார்.
இதற்கு பதிலளித்த சுஷ்மா, நிச்சயம் உதவுகிறேன். இதுதொடர்பாக எங்கள் அமைச்சக அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் என பதில் அளித்தார்.
மேலும், விபத்தில் சிக்கி குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணின் சகோதரர் இந்தியா திரும்பி வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். #Tamilnews
Next Story