search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுப்பழக்கம் குறித்து சர்ச்சை பேச்சு: உத்தரபிரதேச மந்திரி வீட்டு முன் போராட்டம்
    X

    மதுப்பழக்கம் குறித்து சர்ச்சை பேச்சு: உத்தரபிரதேச மந்திரி வீட்டு முன் போராட்டம்

    மதுப்பழக்கம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த உத்தரபிரதேச மந்திரி மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர் வீட்டு முன் இளைஞர்கள் சிலர் நேற்று கூடி கண்டன போராட்டம் நடத்தினர்
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் மற்ற அனைவரையும் விட யாதவர்களும், ராஜபுத்திரர்களும்தான் அதிக மது குடிப்பதாக மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர் நேற்று முன்தினம் கூறியதாக தெரிகிறது. இது மாநிலத்தில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    மந்திரியின் கருத்தால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள அவரது வீட்டு முன் நேற்று கூடி கண்டன போராட்டம் நடத்தினர். ஓம் பிரகாசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், அவரது வீட்டின் மீது முட்டை, தக்காளி போன்றவற்றையும் வீசினர். மேலும் வீட்டில் இருந்த பெயர் பலகையையும் உடைத்தனர்.



    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து போராட்டக்காரர்களை கலைந்து போகச்செய்தனர். இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என கூறியுள்ள போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். 
    Next Story
    ×