என் மலர்

  செய்திகள்

  ம.பி.யில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
  X

  ம.பி.யில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில் நேற்றிரவு 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
  போபால்:

  மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில் நேற்றிரவு 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

  மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள சார்வேட் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு மூன்று மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் ஒரு ஹோட்டலும், லாட்ஜும் அமைந்துள்ளது.

  இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. மேலும் 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது.

  இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
  Next Story
  ×