என் மலர்

  செய்திகள்

  காவல் நிலையத்துக்குள் அரை நிர்வாண கோலத்தில் திருநங்கை - பெண் போலீஸ் பணி இடைநீக்கம்
  X

  காவல் நிலையத்துக்குள் அரை நிர்வாண கோலத்தில் திருநங்கை - பெண் போலீஸ் பணி இடைநீக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்துக்குள் அரை நிர்வாண கோலத்தில் திருநங்கை இருக்கும் வீடியோ பரவியதை அடுத்து பெண் போலீஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம், ஆலப்புழாவில் பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் திருநங்கை ஒருவர் செயல்படுவதாக கடந்த 22-ம் தேதி ஆலப்புழா தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

  இதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் குடிபோதையில் இருந்த திருநங்கையை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். திடீரென்று அதிகாரிகள் முன் தனது ஆடைகளை களைந்து அந்த திருநங்கை ரகளையில் ஈடுபட்டார்.

  அங்கிருந்த பெண் காவல் அதிகாரி ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய இந்த வீடியோ பற்றி போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரியவந்தது.

  இதையடுத்து, ஆலப்புழா தெற்கு காவல் நிலையத்தை சேர்ந்த பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது என ஆலப்புழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுரேந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×