என் மலர்

  செய்திகள்

  இமாச்சலில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய 8 சீக்கியர்கள் விபத்தில் பலி
  X

  இமாச்சலில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய 8 சீக்கியர்கள் விபத்தில் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சீக்கிய கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 8 சீக்கியர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
  சிம்லா:

  இமாச்சலப்பிரதேசம் மாநிலம் குலு மாவட்டத்தில் மனிகாரன் பகுதியில் சீக்கிய புனித தலம் ஒன்று உள்ளது. இங்கு ஸ்வார்காத் பகுதியைச் சேர்ந்த 8 சீக்கியர்கள் வழிபாடு நடத்திவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சண்டிகர் - மனாலி தேசிய நெடுஞ்சாலையில் குன்புர் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்து விலகி அருகிலிருந்த பள்ளத்தில் பாய்ந்தது.

  இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேரும் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான காரை மீட்கும் பணி நடந்து வருவதாகம் போலீசார் கூறியுள்ளனர். கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலையில் கார் நழுவி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #TamilNews
  Next Story
  ×