என் மலர்

  செய்திகள்

  ஸ்ரீதேவி இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மும்பை செல்கிறார் கமல்ஹாசன்
  X

  ஸ்ரீதேவி இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மும்பை செல்கிறார் கமல்ஹாசன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துபாயில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசன் இன்று மும்பை செல்ல உள்ளார். #Sridevi #Kamalhaasan
  சென்னை:

  திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்த பின்னர் இன்று மாலை இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

  இறுதிச்சடங்கில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இருப்பதாக நேற்று தெரிவித்தார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் இன்று மாலை மும்பை செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.25 மணிக்கு மும்பை விமானத்தில் கமல்ஹாசன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

  மும்பையில் உள்ள ஸ்ரீதேவி வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர். #Sridevi #RIPSridevi #Kamalhaasan
  Next Story
  ×