என் மலர்

  செய்திகள்

  நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல்
  X

  நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை ஸ்ரீதேவி மறக்க முடியாத நடிப்பை திரைப்படங்களில் வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். #Sridevi
  புதுடெல்லி:

  தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  “ஸ்ரீதேவியின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. திரையுலகில் பண்முக திறமையை வெளிக்காட்டியவர். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மறக்கமுடியாத நினைவலைகளை பதிவு செய்தவர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா அமைதியடையட்டும்” என பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் பதிவிட்டுள்ளார்.

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “ஸ்ரீதேவி மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு பேரிழப்பாகும். மூன்றாம் பிறை, லம்ஹே, இங்க்லீஸ் விங்லீஸ் ஆகிய படங்களில் அவர் நடித்தது மற்ற நடிகர்களுக்கான முன்னுதாரணமாக இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sridevi #TamilNews
  Next Story
  ×