என் மலர்
செய்திகள்

பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னை: பாராளுமன்றத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜனாதிபதி
பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னை நகரம் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். #BudgetSession
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அவரது உரையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* விளையாட்டுத்துறையில் இளைஞர்களை ஊக்குவிக்க பயனுள்ள திட்டங்கள்.
* பழமையான சென்னை மாநகரத்துக்கு யுனெஸ்கோவின் கலாசார அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
* இஸ்ரோ 140 செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது
* டிஜிட்டல் பண பரிவர்த்தனை எதிர்பார்த்ததை விட பல மடங்கு உயர்வு
* மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் ரெயில்வே துறையின் சாதனையின் மைல்கல்
* 11 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் துரிதமாக தயாராகி வருகிறது
* சுதந்திரத்துக்கு பிறகு விமானத்துறையில் பெரிய மாற்றங்கள் இல்லை; ஆனால் இந்த அரசு சிறிய நகரங்களையும் இணைத்து சரித்திர சாதனை
* 15 கோடி எல்.இ.டி. பல்புகள் விநியோகம் மூலம் மின் கட்டணத்தில் ரூ.40,000 கோடி சேமிப்பு
* தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலியை 40 சதவிகிதம் அரசு உயர்த்தியுள்ளது
* ஏழை எளிய மக்களின் உரிமையை ஆதார் பாதுகாத்துள்ளது
* காவல்துறையை நவீனமாக்க 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
* ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயனடைந்துள்ளனர்
* பிரச்சனைகளில் சிக்கிய 9 ஆயிரம் வெளிநாடு வாழ் இந்தியர்களை காப்பாற்றியுள்ளது அரசு
* திறன் இந்தியா திட்டம் மூலம் 20 லட்சம் இளைஞர்கள் பயன்பெற்றுள்ளனர்
* சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது இந்திய பொருளாதாரத்தில் புதிய புரட்சி
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews

Next Story