என் மலர்

  செய்திகள்

  கோவா நட்சத்திர விடுதியில் சோனியா காந்தி ஓய்வு
  X

  கோவா நட்சத்திர விடுதியில் சோனியா காந்தி ஓய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் தனது நெருங்கிய நண்பர்களுடன் ஓய்வு எடுத்து வருகிறார்.
  பனாஜி:

  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்ற ஆண்டு சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவா சென்றிருந்தார். அப்போது மர்ம கோவா பகுதியில் மக்களிடையே பேசும் போது, மாசற்ற கோவாவை தன் தாயார் சோனியா காந்தி மிகவும் விரும்புவதாக கூறினார்.

  காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக பதவி வகித்த சோனியா காந்தி கடந்த 16-ம் தேதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், சோனியா கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார். தனது நெருங்கிய நண்பர்களுடன் கடந்த 26-ம் தேதி கோவா சென்ற இவர் புத்தாண்டு கொண்டாடிய பிறகு வீடு திரும்புவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு கோவாவில் ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×