என் மலர்

  செய்திகள்

  பூச்சிக்கொல்லி மருந்தினால் பயனில்லை: நெற்பயிர்களை தீயிட்டு அழித்த விவசாயி
  X

  பூச்சிக்கொல்லி மருந்தினால் பயனில்லை: நெற்பயிர்களை தீயிட்டு அழித்த விவசாயி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒடிசா மாநில விவசாயி ஒருவர் நெற்பயிர்களை தாக்கிய பூச்சிகளை அழிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தும் பயனில்லாமல் போனதால், பயிர்களுக்கு தீ வைத்துள்ளார்.
  புவனேஸ்வர்:

  விவசாய நாடான இந்தியாவில் தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.  ரசாயன உரங்கள், பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உரிய பலனைத் தருவதில்லை.  மருந்துகளை விட வீரியம்மிக்க பூச்சிகள் உருவாகி பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் போதிய மகசூல் கிடைக்காமல் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அதேசமயம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களால் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

  பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உரிய பலனை தராதபட்சத்தில் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக பயிர்களை அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விரக்தியினால் விவசாயிகள் தற்கொலை செய்த சம்பவமும் நடந்துள்ளது.

  இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை அவரை தீ வைத்து அழித்த வீடியோ பதிவு தற்போது வெளியாகி உள்ளது.  மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த விவசாயி, நெற்பயிரில் பூச்சி அதிக அளவில் தாக்கியதால் வீரியம் மிக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துள்ளார். ஆனால் அந்த மருந்தினால் பூச்சிகள் அழியவில்லை. மேலும் பரவியது. இதனால், பக்கத்து நிலங்களில் உள்ள நெற்பயிர்களுக்கும் பூச்சிகளின் பாதிப்பு பரவிவிடக்கூடாது என்பதற்காக தனது நிலத்தில் உள்ள பயிர்களை தீ வைத்து அழித்துள்ளார்.
  Next Story
  ×