என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து - ராகுல் காந்தி இன்று ரேபரேலி செல்கிறார்
    X

    அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து - ராகுல் காந்தி இன்று ரேபரேலி செல்கிறார்

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்ட அனல்மின் நிலைய கொதிகலன் விபத்து நடந்த ரேபரேலிக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று வருகை தருகிறார்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்ட அனல்மின் நிலைய கொதிகலன் விபத்து நடந்த ரேபரேலிக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று வருகை தருகிறார்.
     
    குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன.

    காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடந்த சில தினங்களாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் அனல் மின்நிலைய கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 20-க்கு மேற்பட்டோர் பலியாகினர்

    இந்நிலையில் கொதிகலன் விபத்து ஏற்பட்ட ரேபரேலி தொகுதிக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று வருகை தரவுள்ளார். அங்கு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறும் ராகுல், மருத்த்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்து ஆறுதல் கூறவுள்ளார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
     
    Next Story
    ×