என் மலர்
செய்திகள்

துமால் ஜி மீண்டும் அற்புதமான முதல் மந்திரியாக திகழ்வார்: பிரதமர் மோடி புகழாரம்
பாரதிய ஜனதா கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் பிரேம்குமார் துமால் அற்புதமான முதல்-மந்திரியாக திகழ்வார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இமாசலபிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு வரும் 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் வீரபத்ர சிங் முதல்-மந்திரி வேட்பாளராக முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் முதல் மந்திரி வேட்பாளராக முன்னாள் முதல் மந்திரி பிரேம் குமார் துமால் பெயரை அமித் ஷா அறிவித்துள்ளார்.
பா.ஜனதா கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் பிரேம்குமார் துமாலை பாராட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
“இமாச்சல பிரதேசத்தில் மிகுந்த நிர்வாகம் அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவர் பிரேம்குமார் துமால் ஜி. அவர் மீண்டும் அற்புதமான முதல்-மந்திரியாக திகழ்வார். வளர்ச்சிக்கான அரசியலில் பா.ஜ.க. கவனம் செலுத்துகிறது. இமாச்சல பிரதேசத்தை ஊழலற்ற மாநிலமாக ஆக்க விரும்பிகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரேம் குமார் துமால், அங்கு 1998, 2007 தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவர். 2003, 2012 தேர்தல்களில் தோல்வியை தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story