என் மலர்

  செய்திகள்

  புதுமாப்பிள்ளை அகில்
  X
  புதுமாப்பிள்ளை அகில்

  இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  கொழிஞ்சாம்பாறை:

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருங்காட்டியகத்தை சேர்ந்தவர் விஜயகுமாரின் மகன் அகில் (வயது 29). இவருக்கு இன்று காலை திருமணம் நடத்த பெரியோர்கள் முடிவு செய்தனர்.

  அதன்படி அழைப்பிதழ் அடித்து உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உறவினர்களும் பரிசு பொருட்களுடன் வாயாற வாழ்த்த மண்டபத்தில் கூடினர். வாழை மரம், தோரணங்கள் கட்டப்பட்டு திருமண வீடு விழா கோலம்பூண்டது. குழந்தைகள் ஓடியாடி மகிழ்ந்தனர். பெண் வீட்டாரும் மண்டபத்திற்கு வர தயாரானார்கள்.

  இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருமண வீடுகளை இழந்து சோகத்தில் மூழ்கியது. இது குறித்து மாப்பிள்ளையின் தாய் ஷீபா அருங்காட்சியம் போலீசில் புகார் செய்தார்.

  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அகிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் அகில் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  Next Story
  ×