என் மலர்
செய்திகள்

மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக குப்பை தொட்டியை பூஜிக்கும் மக்கள்: வைரல் வீடியோ
அதீத மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக கங்காரு வடிவ குப்பை தொட்டியை மக்கள் பூஜித்து வரும் வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
கடந்த சில நாட்களாக பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகின்றது. அதில், ஏதோ ஒரு ஆலையத்தின் வெளிப்புறத்தில் வைத்துள்ள கங்காரு வடிவத்தில் இருக்கும் குப்பைத்தொட்டி ஒன்றை அங்குள்ள மக்கள் பூஜித்து வருகின்றனர்.
தண்ணீரால் குப்பைத்தொட்டியை அபிஷேகம் செய்யும் சில பெண்கள், அதற்கு குங்குமமும் வைக்கின்றனர். பின்னர், குப்பைகள் போடுவதற்காக இருக்கும் தொட்டி போன்ற அமைப்பில் பூக்களை போடுகின்றனர். இந்த வீடியோவில் இருப்பது எந்த பகுதி என்று தெளிவாக தெரியவில்லை.
அதீத மூடநம்பிக்கை மற்றும் அறியாமையின் வெளிப்பாடு காரணமாக குப்பை தொட்டியை வணங்கும் அளவுக்கு மக்கள் இறங்கியுள்ள வீடியோ கீழே,
Next Story