என் மலர்
செய்திகள்

பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தயார் - ஹர்திக் பட்டேல்
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பட்டேல் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்:
குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால், தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளுக்கும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க இடையே இங்கு நேரடி போட்டி உள்ளது.
ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை எட்டிப்பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. இம்மாநில தேர்தலில் சாதி ஓட்டுகள் முக்கிய பங்காற்றும் என்பதால் இரு கட்சிகளும் சாதி தலைவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
பட்டேல் சாதிக்கு முறையான இடஒதுக்கீடு, வேலை வாய்ப்புகள் வழங்கவில்லை எனக்கூறி கடந்தாண்டு குஜராத்தில் பேரணி மற்றும் போராட்டம் நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர் ஹர்திக் பட்டேல். பட்டேல் சமுதாய வாக்குகளை கைவசம் வைத்துள்ள இவரை தன்வசப்படுத்த பா.ஜ.க எவ்வளவோ முயன்றும் நிறைவேற வில்லை.
பா.ஜ.க.வையும் பிரதமர் மோடியையும் ஹர்திக் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சியை ஆதரிப்போம் என கூறியுள்ளார். எனினும், காங்கிரஸை உடனடியாக ஆதரிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியை இன்னும் நேரில் சந்திக்கவில்லை. ஆனால், நான் சந்தித்துள்ளதாக பா.ஜ.க.வினர் அவதூறு பரப்புகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை மோடி நள்ளிரவில் சென்று பார்த்தது போல, நான் ராகுலை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
Next Story