என் மலர்

  செய்திகள்

  கேரளாவில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
  X

  கேரளாவில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மாநிலத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பாக அச்சிறுமியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குளத்துப்புழா பகுதியச் சேர்ந்த 7 வயது சிறுமி பள்ளிக்கூடத்தில் இருந்து வரும் வழியில் காணாமல் போனார். இந்நிலையில், அங்குள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் சிறுமியின் சடலம் கிடப்பதாக சிலர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

  இதனையடுத்து, சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்ததில் ராஜேஸ் என்பவர் சிறுமியின் கையை பிடித்து அழைத்துச் செல்வது போல காட்சிகள் பதிவாகியுள்ளன.

  இதன் அடிப்படையில் ராஜேசை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ராஜேஸ் கொலையான சிறுமியின் சித்தியை சமீபத்தில் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×