என் மலர்

  செய்திகள்

  பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொல்வது ரத்தத்தை கொதிக்க வைக்கிறது: பிரியங்கா காந்தி
  X

  பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொல்வது ரத்தத்தை கொதிக்க வைக்கிறது: பிரியங்கா காந்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாட்டில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொல்லும் சம்பவங்களை கேட்டால் தனக்கு ரத்தம் கொதிப்பதாக ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  புதுடெல்லியில் நேற்று நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, நாட்டில் தற்போது பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் தாக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, இந்த சம்பவங்களை கேள்விப்பட்டால் தனக்கு சீற்றம் வருவதாகவும், ரத்தம் கொதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  முன்னதாக பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் இது போன்ற தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் பேசுகையில்,” பகுத்தறிவு மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாமல் இத்தகைய கும்பல்கள் வேகமாக செயல்படுகிறது. இதற்கான விளைவுகளை நாம் நிறுத்தியாக வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடந்துள்ள சமீபத்திய கொலைகளை கண்டித்து பேசினார்.
  Next Story
  ×