என் மலர்

  செய்திகள்

  மோசமான வானிலை: அரியானா முதல் மந்திரி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
  X

  மோசமான வானிலை: அரியானா முதல் மந்திரி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியானா மாநிலத்தில் நிலவிய மோசமான வானிலையால், முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
  சண்டிகர்:

  அரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் இருந்து குர்கான் செல்வதற்காக முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் இன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்.

  ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் வானிலை மோசமடைந்தது. இதையடுத்து, ஹெலிகாப்டரால் செல்ல முடியாது என்பதை உணர்ந்து கொண்ட பைலட், உடனே அவசரமாக தரையிறக்கினார்.

  இதைதொடர்ந்து, முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், ஜஜ்ஜார் பகுதியில் இருந்து காரில் குர்கான் சென்றார்.

  ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய முதல் மந்திரி கட்டார், அங்குள்ள மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் கைகுலுக்கி மகிழ்ந்தார். அப்போது அவர்களிடம், “நான் ஏன் இங்கு இறங்கினேன் தெரியுமா? கடவுள் உங்களை பார்ப்பதற்காக என்னை இங்கு இறக்கி விட்டுள்ளார்’’ எனக் கூறினார்.
  Next Story
  ×