என் மலர்

    செய்திகள்

    ராஜஸ்தான் : சாலை விபத்தில் காரில் பயணம் செய்த புது மாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி
    X

    ராஜஸ்தான் : சாலை விபத்தில் காரில் பயணம் செய்த புது மாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜஸ்தானில் திருமணத்துக்கு சென்று திரும்பியபோது நடந்த சாலை விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட 4 பேர் பலியாகினர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டத்தில் நேற்று இரவு திருமண விழா நடைபெற்றது. திருமணம் முடிந்து மாப்பிள்ளை குடும்பத்தினர் ஒரு பெரிய காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    நள்ளிரவில் பிகானர் என்ற பகுதியில் வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பின்தொடர்ந்து வந்த இரண்டு வாகனங்கள் வேகமாக மோதின.

    இந்த திடீர் விபத்தில் காரில் பயணம் செய்த புது மாப்பிள்ளை ஜகத்பால் சிங், அவரது  உறவினர்கள் சந்தீப்குமார், ரகுவீர்சிங், சுபாஷ் ஜாட் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், காரில் பயணித்த ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடம் சென்று இறந்தவர்கள் உடல்களை மீட்டனர். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணம் முடிந்து வீடு திரும்பிய புது மாப்பிள்ளை விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×