என் மலர்

    செய்திகள்

    உ.பி. : தடை செய்யப்பட்ட மாட்டிறைச்சி வைத்திருந்த சகோதரர்கள் கைது
    X

    உ.பி. : தடை செய்யப்பட்ட மாட்டிறைச்சி வைத்திருந்த சகோதரர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
    முசாபர்நகர்:

    பசுவதை தடை சட்டத்தை மிக தீவிரமாக பின்பற்றும் வகையில் மாடுகளை இறைச்சிக்காக விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என உத்தரவிட்ட மத்திய அரசு மாட்டிறைச்சி வைத்திருக்கவும் தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பசேரா கிராமத்தில் சிலர் உரிய அனுமதியின்றி மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அப்பகுதியில் போலீசார் அதிரடியாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  

    அந்த கிராமத்தை சேர்ந்த அமின் மற்றும் ஆசிப் ஆகியோர் பைகளில் மறைத்து வைத்திருந்த 35 கிலோ மாட்டிறைச்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சகோதரர்களான அவர்களை கைது செய்து பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×