என் மலர்

    செய்திகள்

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் குண்டு வீச்சு: 4 போலீசார் காயம்
    X

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் குண்டு வீச்சு: 4 போலீசார் காயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். குண்டுகள் வெடித்ததில் போலீசார் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் என்ற இடத்தில் ஒரு வங்கிக்கு அருகே போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். குண்டுகள் வெடித்ததில் போலீசார் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்த போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×