என் மலர்
செய்திகள்

காஷ்மீரில் ராணுவம் அதிரடி நடவடிக்கை: 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் நேற்றும் இன்றும் இந்திய ராணுவம் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் நாச வேலையில் ஈடுபடுவதற்காக காஷ்மீர் வழியாக எல்லைக்குள் ஊடுருவி வருகிறார்கள்.
எல்லைப் பாதுகாப்பு படையினரும் ராணுவ வீரர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு ஊடுருவலை முறியடித்து வருகிறார்கள். இதனால் எல்லைப் பகுதியில் அடிக்கடி ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்து வருகிறது.
சமீபத்தில் இந்திய வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்து உடலை சிதைத்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
பாகிஸ்தானுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஊடுருவலில் ஈடுபடும் தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடி வருகிறது.
நேற்றும் இன்றும் இந்திய ராணுவம் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
முதலாவது தாக்குதல் காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ராம்பூர் என்ற இடத்தில் நடந்தது.
தீவிரவாதிகள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து நேற்று மாலை ஊடுருவலில் ஈடுபட்டார்கள் இதை எல்லைப் பாதுகாப்பு படையினர், கண்காணித்து உடனே துப்பாக்கியால் சுட்டு எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டவாறு முன்னேறி வந்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டார்கள். இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தீவிரவாதிகள் பின் வாங்கினார்கள்.
இந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்ற தீவிரவாதிகள் பாகிஸ்தான் பகுதியில் பதுங்கி இருப்பதால் துப்பாக்கி சண்டை நீடிக்கிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகள் என தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் ராணுவம் நடத்திய வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தலைவன் சப்ஸர் அகமத் பட் சுட்டுக் கொல்லப்பட்டான். பட் உள்பட 3 தீவிரவாதிகள் அங்குள்ள கட்டிடத்தை கைப்பற்றி அதில் பதுங்கி இருந்தனர்.
பாதுகாப்பு படையினர் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் பட்டும் மற்றொரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றொரு தீவிரவாதி ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டான்.
காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிஸ்புல் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் புர்கான் வானி ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதைக் கண்டித்து காஷ்மீரில் பல மாதங்களாக அடங்காமல் கல்வீச்சும், நீண்ட போராட்டமும் நடந்தது. கலவரம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றது.
புர்கான் வானிக்கு பதிலாகத்தான் ஹிஸ்புல் இயக்க தலைமை பொறுப்பை சப்ஸர் பட் ஏற்று நடத்தி வந்தான். இவனது தலைக்கு காஷ்மீர் அரசு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்து இருந்தது.
புர்கான் வானியின் பால்ய நண்பனான சப்ஸர் பட் ஒரு பெண்ணை காதலித்தான். அந்தப் பெண் ஏற்க மறுத்ததால் உறவை முறித்துக் கொண்டான். இதனால் மனம் வெறுத்து தீவிரவாதியாக மாறினான்.

சப்ஸர் பட் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் மீண்டும் கல்வீச்சு சம்பவம் தொடங்கியது. இன்று அனந்தநாக் மாவட்டத்தில் 5 இடங்களில் ஹிஸ்புல் இயக்க ஆதரவாளர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே நேற்று எல்லையில் உரி செக்டார் பகுதியில் ஊடுருவலில் ஈடுபட்ட பாகிஸ்தானியர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு செயல் கமிட்டி குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
இந்த குழுவினர்தான் கடந்த 1-ந்தேதி இந்திய வீரர்கள் 2 பேரை தலை துண்டித்து கொன்றவர்கள் என ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story