என் மலர்

    செய்திகள்

    லாட்டரி சீட்டுடன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரசலுதீன்.
    X
    லாட்டரி சீட்டுடன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரசலுதீன்.

    கேரள லாட்டரியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு ரூ.4 கோடி பரிசு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரள லாட்டரியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு ரூ.4 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகள், நோயாளிகளுக்கு வழங்குவேன் என ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சுகாதார மேம்பாட்டிற்கும், பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவும் தேவையான நிதி திரட்ட அரசே கேரள பாக்கியகுறி, காருண்யா பாக்கியகுறி மற்றும் கேரள ஸ்ரீலட்சுமி என 3 லாட்டரி சீட்டுகளை நடத்தி வருகிறது.

    இந்த லாட்டரி சீட்டுகளின் மூலம் கிடைக்கும் நிதி, அரசின் நலத்திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும். கடந்த சித்திரை மாதம் விஷூ தினத்தையொட்டி கேரள அரசு பம்பர் லாட்டரி சீட்டை அறிமுகம் செய்தது.

    இதில் முதல் பரிசு ரூ.4 கோடி என்று அறிவித்தது. இந்த லாட்டரி சீட்டு குலுக்கல் கடந்த வாரம் நடந்தது. முதல் பரிசான ரூ.4 கோடி பரிசுக்கான லாட்டரி சீட்டு ஆற்றிங்கல் பகுதியில் விற்பனையாகி இருந்தது.

    இந்த பரிசு சீட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலியை லாட்டரி சீட்டு விற்ற கடைக்காரர்கள் தேடி வந்தனர். நேற்றுதான் அந்த சீட்டை ஆற்றிங்கல் பரவூர்கோணம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரசலுதீன் வாங்கி இருப்பது தெரிய வந்தது.

    அவர், நேற்று அந்த சீட்டை அருகில் உள்ள ஸ்டேட் பாங்கியில் டெபாசிட் செய்தார்.

    ரூ.4 கோடி பரிசு பெற்ற ரசலுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் கேரள லாட்டரி சீட்டை பல ஆண்டுகளாக வாங்கி வருகிறேன். ஆற்றிங்கல் கடையில்தான் எப்போதும் வாங்குவேன். அவ்வப்போது ரூ.500, ரூ.1000 என பரிசுகள் விழும். பெரிய தொகைக்கு பரிசு கிடைத்தது இல்லை.

    இப்போதுதான் ரூ.4 கோடி பரிசு கிடைத்துள்ளது. இது சந்தோ‌ஷமாக உள்ளது. இந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகள், நோயாளிகளுக்கு வழங்குவேன். மீதி பணத்தை குடும்பத்தினருக்கு அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×