என் மலர்

  செய்திகள்

  சயனின் கார் விபத்து நடந்த இடத்தில் கேரள போலீசார் விசாரணை
  X

  சயனின் கார் விபத்து நடந்த இடத்தில் கேரள போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனின் கார் விபத்து நடந்த இடத்தில் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கொழிஞ்சாம்பாறை:

  கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி பலியானார்.

  இதேபோல் மற்றொரு குற்றவாளியான சயனும், மனைவி, மகளுடன் காரில் சென்ற போது கேரள மாநிலம் பாலக்காடு அருகே கண்ணடி என்ற இடத்தில் விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி வினுபிரியா, நீனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

  படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சயனை மீட்டு கோவை தனியார் ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இதற்கிடையே சயனின் கார் விபத்து நடந்த இடத்தில் கேரள போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

  சயனின் காரின் போலி நம்பர் பிளேட்டை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த விபத்து ஏதேச்சையாக நடந்ததா? கண்டெய்னர் லாரி பின்பக்கமாக கார் மோதியதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரித்தனர்.

  மேலும் கண்டெய்னர் டிரைவரான ஆந்திராவை சேர்ந்த கிரணிடம் கேரள போலீசார் விசாரித்தனர்.
  Next Story
  ×