என் மலர்
இந்தியா

"தமிழ்நாட்டுல கால் வை பாக்குறேன்.." வைகோவின் பேச்சால் கொந்தளித்த நிர்மலா சீதாராமன்!
- ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார்.
- அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா..." என்று தமிழில் கூறினார்.
கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
வக்பு மசோதா நிறைவேற்றம் உள்ளிட்டவற்றால் பாராளுமன்றம் கடந்த நாட்களில் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மதிமுக எம்.பி வைகோவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.
வக்பு மசோதா மீதான விவாதத்தின்போது உத்தரப்பிரதேச பாஜக எம்பி சுதான்ஷூ திரிவேதி, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என பொருள்படும்படி பேசினார். இதற்கு எதிர்க்கட்சி இருக்கையில் இருதவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், சுதான்ஷூ திரிவேதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
அப்போது ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார். அவருக்கு ஆதரவாக தமிழக எம்பிக்களும் எழுந்து குரல் எழுப்பினர்.
அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா... என்று தமிழில் கூறிவிட்டு, சபாநாயகரை நோக்கி வைகோ குறித்து முறைப்பாடு வைக்கத் தொடங்கினார்.
அவர் கூறியதாவது, வைகோ எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடியவர், ஆனால் இப்போது அவர் பயன்படுத்திய மொழியை பொறுத்துக்கொள்ள முடியாது. நீ தமிழ்நாட்டுல கால் வை பாக்குறேன், நீ தமிழ்நாட்டுல நுழஞ்சுடுவியா நான் பாக்குறேன் என்ற அவர் பேசுகிறார். இது ரொம்ப தப்பு என சபாநாயகரிடம் முறையிட்டார்.
மேலும் வைகோ பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அதன்படி வைகோவின் பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.






