என் மலர்tooltip icon

    உண்மை எது

    உக்ரைன் அழகி அனஸ்தீசியா லென்னா
    X
    உக்ரைன் அழகி அனஸ்தீசியா லென்னா

    ரஷியாவுக்கு எதிராக நான் போருக்கெல்லாம் செல்லவில்லை- துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த உக்ரைன் அழகி விளக்கம்

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அழகி அனஸ்டாசியா இணைந்து தேசத்திற்காக சண்டையிடுவதாக செய்திகள் பரவத்தொடங்கின.
    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா இன்று 9-வது நாளாக போர் செய்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் கடுமையாக போர் செய்து வருகின்றனர். சுமார் 6000 ரஷியா ராணுவ வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனிலும் கடும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, நாட்டை காப்பாற்ற உக்ரைன் மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவ்வாறு போருக்கு வரும் மக்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்படும் என கூறினார்.  இதனால் உக்ரைன் நாட்டு பெண்களும் ராணுவத்தில் இணைந்து போர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த முன்னாள் அழகி அனஸ்டாசியா லென்னா, துப்பாக்கியுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு #standwithukraine, #handsoffukraine ஆகிய ஹேஷ்டேகில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து ரஷியாவுக்கு எதிரான போரில் அனஸ்டாசியாவும் துப்பாக்கி ஏந்தி தேசத்திற்காக சண்டையிடுவதாக செய்திகள் பரவத்தொடங்கின.

    இந்நிலையில் தான் போருக்கு எல்லாம் போகவில்லை என்று அனஸ்டாசியா லென்னா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் ராணுவ வீராங்கணை அல்ல, சாதாரணப் பெண். என் நாட்டிலுள்ள எல்லா மக்களைப் போலவே நானும் ஒருத்தி. நான் பல வருடங்களாக ஏர்சாஃப்ட் விளையாடுகிறேன். அங்கு தரப்பட்ட துப்பாகியுடன் நான் பதிவிட்ட படங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன. நான் அனைத்து படங்களையும் மக்களை ஊக்குவிக்கவே பகிர்ந்தேன்.

    உக்ரைன் பெண்கள் வலிமையான, நம்பிக்கையான மற்றும் சக்திவாய்ந்தவர்கள் என்பதை காட்டுவதை தவிர வேறு எந்த பிரசாரத்தையும் அந்த புகைப்படம் மூலம் நான் செய்யவில்லை. உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராடுகிறோம். 

    இவ்வாறு அனஸ்டாசியா லென்னா தெரிவித்தார்.

    இதையடுத்து அவர் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிடவில்லை என்பதை உறுதி செய்துகொண்டார்.
    Next Story
    ×