என் மலர்

  செய்திகள்

  வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் இப்போது இல்லை
  X

  வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் இப்போது இல்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் இந்த மாதம் நடைபெற வாய்ப்பு இல்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்து 2 மாதம் கழித்து தான் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
  வேலூர்:

  வேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

  அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.

  இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் தனித்தனியாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

  தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை பெற்று தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.

  இதை ஆய்வு செய்த தேர்தல் கமி‌ஷன் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை அறிவிக்காமல் உள்ளது.

  இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

  வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிடிபட்ட பணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த பணம் எந்த வங்கியில் இருந்து யாருடைய கணக்கில் இருந்து பெறப்பட்டது? எதற்காக 200 ரூபாயாக கட்டு கட்டாக வாங்கினார்கள் போன்ற விபரங்களுக்காக பலரிடம் விசாரிக்க வேண்டி உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  இந்த விசாரணை முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் தகவல் தெரிவிப்பார்கள். அதை ஆய்வு செய்த பிறகு தான் வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் மேற்கொள்ளும்.

  எனவே இந்த மாதத்தில் வேலூரில் தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் நடத்த குறைந்தது 2 மாதங்கள் ஆகலாம்.

  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
  Next Story
  ×