search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்- அன்புமணி ராமதாஸ் பேட்டி
    X

    அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்- அன்புமணி ராமதாஸ் பேட்டி

    அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் வாக்களித்த பின் கூறியுள்ளார். #anbumaniramadoss #admk #election2019
    திண்டிவனம்:

    திண்டிவனத்தில் மாரியம்மன்கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை ஆரம்ப பள்ளியில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் இன்று காலை வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடைபெற்ற பாராளு மன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்பட 39 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மிகப் பெரிய ஆதரவு உள்ளது. வலிமையான பாரதம், வளமான தமிழகம் அமைப்பதற்காக மக்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளதா செய்திகள் வருகின்றன.

    எங்களது கூட்டணி பாட்டாளி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக உள்ள கூட்டணி. எதிர்கட்சியினர் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ள கூட்டணி. தமிழகத்தில் நடைபெறும் 22 சட்டசபை இடைத்தேர்தலில் மிகபெரிய வெற்றி பெறும். தற்போதைய ஆட்சி தொடர்ந்து நிலையாக நீடிக்கும். எங்கள் கூட்டணி தமிழகத்தில் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய வெற்றியை பெறும்.
     
    வேலூரில் பாராளுமன்ற தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து உள்ளது. இதன் மூலமாக தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுள்ளது தெரிகிறது. வேலூரில் எதிர் அணியினருக்கு சொந்தமான பணம் கைப்பற்றபட்டது குறித்து எந்தந்த வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட இருந்தது குறித்து அறிக்கையை சமர்பித்த பின்புதான் வேலூர் பாராளுமன்ற தேர்தலை ரத்து செய்தது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்னணு வாக்கு எந்திரம் நம்பகத்தன்மையற்று உள்ளதா என அன்புமணி ராமதாசிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்த போது, இந்த தேர்தல் நேரத்தில் இதுகுறித்து தற்போது பேச தேவையில்லை, இருந்த போதிலும் வாக்கு அளித்தேன். விவிபேட் எந்திரத்தில் சின்னம் தெளிவாக இருந்தாலும், உலக நாடுகள் அளவில் வாக்குசீட்டு முறையை பயன்படுத்தி வருகின்றனர். வருங்காலத்தில் தேர்தல் ஆணையம் மாற்றங்களை கொண்டு வரலாம் என்றார். #anbumaniramadoss #admk #election2019
    Next Story
    ×