என் மலர்
செய்திகள்

காஞ்சி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து வரலட்சுமி மதுசூதனன் பிரசாரம்
சென்னை:
மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் காஞ்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.
அப்போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
சிங்கபெருமாள் கோவில் பகுதிக்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சத்தில் குடிநீர் வசதி, மழைநீர், கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படும்.
ஒரே கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ. இருந்தால் மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்ற வசதியாக இருக்கும். எனவே உதய சூரியன் சின்னத்தை மறவாதீர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து கூடு வாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பஜாரில் வீதி வீதியாக சென்று வாக்கு கேட்டார்.
பிரசாரத்தின் போது எம்.கே.தண்டபாணி, கே.பி.ராஜன், ஆப்பூர் சந்தானம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
#LokSabhaElections2019






