என் மலர்
செய்திகள்

தேனியில் ராகுல்காந்தி 12-ந் தேதி பிரசாரம்- கே.எஸ்.அழகிரி பேட்டி
திண்டுக்கல்:
தேனியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேனி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் பிடித்தவர். எனவே அவருக்காக பிரசாரம் செய்ய வருகிற 12-ந் தேதி ராகுல்காந்தி தேனி வருகிறார்.
அன்னஞ்சி விலக்கு பைபாஸ் சாலை பகுதியில் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி எங்களுக்கு விளக்க தேவையில்லை. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி 300 பயங்கரவாதிகளை கொன்றதாக கூறுகின்றனர். ஆனால் எந்த ஊடகத்திலும் அதற்கான ஆதாரம் வெளியிடவில்லை. ஜி.எஸ்.டி. வரி என்பது நல்ல திட்டமே ஆனால் கட்டமைப்பு சரியாக செய்யப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சி வந்ததும் ஜி.எஸ்.டி. வரி ஒழுங்குபடுத்தப்படும்.
மக்களுக்கு பாதிப்பான திட்டத்தை நாங்களே அறிமுகப் படுத்தியிருந்தாலும் அதனை செயல்படுத்தமாட்டோம். ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை தூக்கிலிட நாங்கள் போராட வில்லை. கோர்ட்டு அவர்கள் குற்றவாளி என்பதால் விடுதலை செய்யவில்லை. 7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு ஒன்றும் பிரசசினை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #rahulgandhi #congress






