search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம்
    X

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம்

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் கொளுத்தும் வெயிலில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். #udhayanidhistalin

    ராமநாதபுரம்:

    தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் இ.யூ.முஸ்லிம்லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ச.சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

    இன்று காலை முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி சிக்கலில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து திருவாடானை சட்டமன்ற தொகுதியில் பனைக்குளம், ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதியில் அரண்மனை வாசல் அருகே, பரமக்குடி சட்ட மன்ற தொகுதியில் சத்திரக்குடி, பரமக்குடியில் காந்திசிலை, எமனேஸ்வரம், பார்த்திபனூர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று உரையினை கேட்டு தங்கள் வாக்கு ஏணி சின்னத்திற்கும், உதயசூரியனுக்கும் என பலத்த குரலில் கோ‌ஷமிட்டனர்.

    உதயநிதி ஸ்டாலினுடன் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமார், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், பாராளுமன்ற இ.யூ. முஸ்லிம் லீக் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஷாஜஹான், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர். #udhayanidhistalin 

    Next Story
    ×