search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமாநிலத்தில் வெற்றி கிடைக்காது என்பதால் தென் மாநிலத்தை குறி வைக்கிறார்- ராகுல் மீது பொன். ராதாகிருஷ்ணன் தாக்கு
    X

    வடமாநிலத்தில் வெற்றி கிடைக்காது என்பதால் தென் மாநிலத்தை குறி வைக்கிறார்- ராகுல் மீது பொன். ராதாகிருஷ்ணன் தாக்கு

    வடமாநிலங்களில் காங்கிரசுக்கு தோல்வி உறுதி என்று தெரிய வந்துவிட்டது. அதனால்தான் ராகுல் காந்தி தென் மாநிலத்தை குறி வைக்கிறார் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #ponradhakrishnan #rahulgandhi

    நாகர்கோவில்:

    மத்திய மந்திரியும், கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கான தேசிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து உள்ளது. இன்று மேலும் 3 சட்டசபை தொகுதிகளுக்கான கூட்டம் நடைபெற உள்ளது.

    நாளை மறுநாள் ஒட்டு மொத்த பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் இலகுவான வெற்றியை, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனக்கு மட்டுமல்ல எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளான தே.மு.தி.க., த.மா.கா. அனைத்துக்கும் உள்ளது.

    இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக பொய் கூறி கடந்த முறை வெற்றி பெற்றுவிட்டதாக கூறுவது தவறு. இதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது. 10 சதவீத இட ஒதுக்கீடு கூட அதன் அங்கம் தான். அரசியல் லாபத்திற்காக மற்றவர்கள் எதை வேண்டுமானாலும் கூறலாம்.

    இந்த மண்ணின் மைந்தர்களான மார்சல் நேசமணி, பொன்னப்ப நாடார், சுவாமி தாஸ் என்று எண்ணற்ற தலைவர்கள் இந்த மண்ணில் வெற்றிபெற்றாலும், பெறா விட்டாலும் இதன் உயர்வுக்கும், வளத்திற்கும் உழைத்து உள்ளார்கள். அனைத்து திட்டங்களும் மக்கள் நலன் சார்ந்துதான் உள்ளது.

    பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு தாக்கல் செய்துள்ளதால் அங்கு வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அய்யாக்கண்ணு விவசாயிகள் பிரச்சினைக்காக போராடியபோது அவருக்கு துணை நின்றவன் நான். போராட்ட வழிமுறை மாறியபோது அது ஏற்புடையது இல்லாமல் ஆகிவிட்டது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இதுபோன்ற செயலை கைவிட வேண்டும்.

    வடமாநிலங்களில் காங்கிரசுக்கு தோல்வி உறுதி என்று தெரியவந்துவிட்டது. அதனால்தான் ராகுல் காந்தி தென் மாநிலத்தை குறி வைக்கிறார். அதனால் தான் அவரது கட்சிக்காரர்கள் ராகுல் தென் மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


    அரசியலில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி வைப்பதும், பிறகு மாற்றிக் கொள்வதும் இயல்பு. அ.தி.மு.க.வை அமித்ஷாவிடம் அடகு வைத்து விட்டதாக மு.க. ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல. அடகு என்ற வார்த்தையை இப்போது பயன்படுத்துவது தவறானது.

    குமரி மாவட்டம் மட்டுமல்ல எல்லா ரப்பர் விவசாயிகளுக்காகவும் வெளிநாட்டில் இருந்து ரப்பர் இறக்குமதி பிரச்சினைப் பற்றி பேசி உள்ளோம். இங்குள்ள 6 எம்.எல்.ஏ.க்களும் எங்கு சென்று உள்ளனர். ரப்பர் பிரச்சினைக்காக அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரப்பர் பிரச்சினைக்காக சட்டசபையில் என்ன பேசி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #rahulgandhi

    Next Story
    ×