என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட சூர்யா.
போலீஸ்காரரை கத்தியால் தாக்கிய வாலிபர் கைது
- அரித்துவாரமங்கலம் கடைதெருவில் சூர்யா என்ற நபர் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தி வந்துள்ளார்.
- காவலர் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து சூர்யாவை அறிவுறுத்தியதால் ஆத்திரமடைந்த சூர்யா போலீஸ்காரரை கத்தியால் தாக்கியுள்ளார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் அரித்துவாரமங்கலம் கடை தெருவில் கடந்த 29- ம் தேதியன்று சூர்யா என்ற நபர் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தி வந்துள்ளார்.
இது தொடர்பாக பொது மக்கள் காவல் நிலையத்தில் தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து அங்கு பணியாற்றும் காவலர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு வந்து, சூர்யாவை வீட்டிற்கு போக சொல்லி அறிவுறுத்தி உள்ளார்.
அதைக் கேட்காத சூர்யா காவலரை கத்தியால் தாக்கியுள்ளார். இதையடுத்து சூர்யா என்ற நபரை வலங்கைமான் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் நீடாமங்கலம் நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Next Story






