search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது
    X

    பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹெல்மெட் அணிந்தபடி வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்தார்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்

    கோவை,

    கோவை தடாகம் ரோடு ஏ.கே.எஸ் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி சாந்தி (48), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை ஹெல்மெட் அணிந்தபடி வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்தார். திடீரென அவர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்ப முயன்றார். உடனே சுதாரித்த சாந்தி நகையை பறிக்க விடாமல் தடுத்தார். இதில், 1.5 கிராம் நகையை பறித்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால், அதிர்ச்சியடைந்த சாந்தி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து சாந்தி ஆர்.எஸ்.புரம் போலீசில் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், நகையை பறித்து சென்றது சிவகாசியை சேர்ந்த மாரீஸ்வரன் (21) என்பதும், கோவையில் தங்கி பைக் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×