என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் சார் பதிவாளரை தாக்கிய வாலிபர் கைது
- சிவபிரகாஷ் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த பிரகாஷ் அவரிடம் தகராறு செய்தார்.
- சிவபிரகாஷ் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை குனியமுத்தூர் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (வயது 48). இவர் பொள்ளாச்சி கூட்டுறவு சங்கத்தில் சார்பதிவாளராக உள்ளார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த எல்.ஐ.சி. ஊழியர் பிரகாஷ் (39) என்பவர், சிவபிரகாசின் தண்ணீர் மோட்டாரை அவருக்கு தெரியாமல் பயன்படுத்தி உள்ளார்.
இதனையறிந்த சிவபிரகாஷ், பிரகாசை கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே மோதல் இருந்து வந்தது. இந்தநிலையில், நேற்று சிவபிரகாஷ் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த பிரகாஷ் அவரிடம் மீண்டும் தகராறு செய்தார்.
இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் தகாத வார்த்தைகளால் பேசி சிவபிரகாஷ் மற்றும் அவரது மகளை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.
இது குறித்து சிவபிரகாஷ் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






