search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக மக்கள்தொகை தினம் பேச்சு போட்டி-  ராயகிரி சி.பா.ஆதித்தனார் பள்ளி மாணவிக்கு முதல் பரிசு
    X
    நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    உலக மக்கள்தொகை தினம் பேச்சு போட்டி- ராயகிரி சி.பா.ஆதித்தனார் பள்ளி மாணவிக்கு முதல் பரிசு

    • உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம்,பேச்சு போட்டி சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • பேச்சு போட்டியில் ராயகிரி சி.பா.ஆதித்தனார் பள்ளி மாணவி அபிரஞ்சனி முதல் பரிசினையும், சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யபிரியா 2-ம் பரிசையும், சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி 3-ம் பரிசினையும் வென்றனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலகம் சார்பில் மருத்துவம் ஊரக நல பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம்,பேச்சு போட்டி சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


    நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, பள்ளியின் செயலர் தங்கேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்திசரவணபாய், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.

    இதில் ராயகிரி சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி, தென்மலை அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகிரி விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சு போட்டியில் ராயகிரி சி.பா.ஆதித்தனார் பள்ளி மாணவி அபிரஞ்சனி முதல் பரிசினையும், சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யபிரியா 2-ம் பரிசையும், சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி 3-ம் பரிசினையும் வென்றனர். இவர்களுக்கு பரிசுகளை பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, பள்ளியின் செயலர் தங்கேஸ்வரன், டாக்டர் சாந்தி சரவணபாய் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜாராம், செவிலியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் சண்முகவேலு நன்றி கூறினார்.

    Next Story
    ×