என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரில் கஞ்சா கடத்திய பெண் குண்டர் சட்டத்தில் கைது
- கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி தனது காரில் 7 கிலோ கஞ்சாவை திருச்செங்கோடு வழியாக கடத்த முயன்ற போது, போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கினார்.
- திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஷர்மிளா பேகமை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
நாமக்கல்:
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷர்மிளா பேகம். இவர் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி தனது காரில் 7 கிலோ கஞ்சாவை திருச்செங்கோடு வழியாக கடத்த முயன்ற போது, போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கினார்.
திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஷர்மிளா பேகமை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நாமக்கல் கலெக்டருக்கு மதுவிலக்கு அமலாக்கு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர்.
இந்த பரிந்துரையை கலெக்டர் ஏற்றார். இதை அடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அதற்கான உத்தரவை சேலம் சிறையில் உள்ள ஷர்மிளாவிடம் வழங்கினர். தொடர்ந்து அவரை கோவை சிறைக்கும் மாற்றினர்.
Next Story






